கல்வாரி அன்பால் இயேசு உன்னை

கல்வாரி அன்பால் இயேசு உன்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        கல்வாரி அன்பால் இயேசு உன்னை

                        கனிவுடனே அழைக்கிறாரே

 

1.         உந்தன் பாவங்கள் போக்கிடவே

            சொந்த ஜீவனை தத்தம் செய்தார் - 2

            இந்த அன்பினை எண்ணிடுவாய் நீ

            இவ் அன்புக் ஈடாய் அன்பே இல்லையே - 2 - கல்வாரி

 

2.         மாயலோகமாம் இது உன்னை கைவிடும்

            தீமையினால் முற்றும் அழிந்தேவிடும் - 2

            தூய தேவனை அண்டிடுவாய் நீ

            தாயினும் மேலாய் காத்துக்கொள்வார் - 2 - கல்வாரி

 

3.         உன் வாலிபமும் அழகுமெல்லாம்

            மண்ணோடு மண்ணாய் மறைந்தே போகும் - 2

            விண் சாயலை நீ பெற்றிடவே

            விண்ணவர் இயேசு அழைக்கிறாரே - 2 - கல்வாரி

 

4.         ஆகாய மீதில் ஆரவாரமாய்

            தூதர்களோடு இயேசு தோன்றுவார் - 2

            நித்திய காலமாய் சத்திய தேவனை

            கண்டு துதிப்போம் ஆனந்தம் பொங்க - 2 - கல்வாரி

 

https://www.youtube.com/watch?v=bt9pozKam30

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு