14 February 2024

என் தேவனே உம் மகத்துவக் கிரியைகள்

என் தேவனே உம் மகத்துவக் கிரியைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

1.       என் தேவனே உம் மகத்துவக் கிரியைகள்

            என் உள்ளத்தை ஜொலிக்கச் செய்யுதே

            மேல் வானமும், திரள் நட்சத்திரமும்

            மேலோனின் மா வல்லமை காட்டுதே

 

                        என் ஆத்துமாவே தேவனைப் போற்றிடு,

                        நீர் வல்லவர் மா வல்லவர்,

                        என் ஆத்துமாவே பாடி முழங்கிடு,

                        நீர் வல்லவர் மா வல்லவர்,

 

2.         காடுகளும் கண் கொள்ளா சிகரமும்

            கவருதே, களிப்புண்டாக்குதே

            பட்சிகளும் பாய்ந்தோடும் நீரோட்டமும்

            பாடுதே, பரவசமாக்குதே.

 

3.         குமாரனை ஒரே பேறானவரை

            குருசினில் குருதி சிந்தவே

            அனுப்பிய மா அன்பின் சொரூபியே

            அறைந்தீரே என் பாவம் போக்கிட

 

4.         பேர் எக்காள சத்தம் தொனித்திடவும்

            எம்பெருமான் என்னை அழைத்திட

            ஏகுவேனே எந்நாளும் பாடுவேனே

            நீர் வல்லவர், மா வல்லவர்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...