14 February 2024

கல்வாரி மேட்டில் கொடும் கோரக் குருசில்

கல்வாரி மேட்டில் கொடும் கோரக் குருசில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கல்வாரி மேட்டில் கொடும் கோரக் குருசில்

                        என் இயேசு தேவன் தொங்குகின்றார்

                        என் பாவம் போக்க மாசற்ற தேவன்

                        எனக்காக யாவும் துறந்து நின்றார்

 

1.         திருமேனி எங்கும் காயங்களாலே

            திருஇரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி - 2

            ஏழையின் நெஞ்சம் ஏங்கியே வாட

            ஏன் இந்த கோளம் எனக்காகத்தானோ - 2 - கல்வாரி

 

2.         தலை சாய்க்க உலகில் இடமில்லை என்றே

            பெரும்பாரக் குருசில் தலை சாய்த்த எம் தேவா - 2

            விலையேறப்பெற்ற நின் உதிரத்தால் மீட்க்க

            விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர் - 2 - கல்வாரி

 

3.         உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா

            பலியாகத் தந்தீர் உம் அன்பு பெரிதே - 2

            உம் அன்புக்கீடாய் நான் என்ன கொடுப்பேன்

            தலைதாழ்த்தி இன்று என்னையே தந்தேன் - 2 - கல்வாரி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...