14 February 2024

கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி

கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கொல்கொதா மேட்டினிலே

                        கொடூர பாவி எந்தனுக்காய்

                        குற்றமில்லாத தேவ குமாரன்

                        குருதி வடிந்தே தொங்கினார்

 

1.         பாவ சாபங்கள் சுமந்தாரே

            பாவியை மீட்க பாடுபட்டார் - 2

            பாவமில்லாத தேவகுமாரன்

            பாதகன் எனக்காய் தொங்கினார் - கொல்கொதா

 

2.         மடிந்திடும் மன்னுயிர்க்காய்

            மகிமை யாவும் இழந்தோராய் - 2

            மாசில்லாத தேவகுமாரன்

            மூன்றாணி மீதினில் தொங்கினார் - கொல்கொதா

 

3.         இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட

            இரட்சிப்பின் நதி என்னில் பாய - 2

            ஆதரவில்லா தேவகுமாரன்

            அகோரக் காட்சியாய் தொங்கினார் - கொல்கொதா

 

4.         கல்வாரி காட்சி இதோ

            கண்டிடுவாயே கண்கலங்க - 2

            கடின மனமும் உருகிடுமே

            கர்த்தரின் மாறாத அன்பினிலே - கொல்கொதா

 

5.         உள்ளமே நீ திறவாயோ

            உருகும் சத்தம் நீ கேளாயோ - 2

            உன் கரம் பற்றி உன்னை நடத்த

            உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார் - கொல்கொதா

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...