எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

                        என்ன பேரானந்தம் என்ன பேரானந்தம்

                        இயேசுவை சந்திக்க ஏகிடுவோம்

                                    - எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

 

1.         காலையோ மாலையோ வேளையை அறியோம்

            கர்த்தர் வருவார் என்று கருத்துடன் அறிவோம்

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        - எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

 

2.         பூரண வடிவுள்ள சீயோன் நகரம்

            பூரிப்போம் அவரில் புது எருசலையில்

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        - எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

 

3.         பாடுபட்டோர் பலர் பறந்தே போவார்

            பார்த்திபன் இயேசுவில் பாடி மகிழ்வார்

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        - எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

 

4.         மத்திய வானில் சுத்தர்களோடு

            நித்தியானந்தமாய் அத்தனில் மகிழ்வோம்

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        - எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

 

5.         கண்ணிமை பொழுதில் விண்ணில் மறைவோம்

            இன்னல் துன்பம் நீங்கி இயேசுவில் மகிழ்வோம்

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        - எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு