Posts

Showing posts from April, 2025

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய் மேலும் அதிக பாடல்களுக்கு             1.        நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்             நன்றியால் என்னுள்ளம் பொங்கி வழிந்திடுதே             நாவினால் பாடிப்போற்ற நாட்கள் போதுமோ             நல் பாதைதனில் தொடர்ந்தென்னை நடத்தியதால்                                       பல்லவி                           அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்                         எண்ணில்லாத நன்மைகட்காய்                         அல்லேலூயா பாடிடுவேன்   2.          இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்             சோதனையால் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்             நிந்தை துன்ப துயர நேரங்களிலும் உம்             நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் - அன்பின்   3.          மீட்டுக் கொண்டீர் மானிடரின் நடுவினின்று             நீதியின் கனியாய் மிமையில் துலங்க             நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து             நாதனே உம் தோட்ட...

நிதமும் பாடி போற்றுவோம்

நிதமும் பாடி போற்றுவோம் மேலும் அதிக பாடல்களுக்கு                                நிதமும் பாடி போற்றுவோம்                         இதயம் பொங்கிப் பூரிப்பாய் நம் தேவனை   1.          விண்ணவன் நம்மோடிருந்தாரே - இரு             கண்ணின் மணிபோல் காத்தாரே             எண்ணில்லா நன்மைகள் பல ஈந்தாரே             பண்போடு பணிந்திடுவோம் - நிதமும்   2.          வந்தார் பூவில் நம்மை மீட்க தம்மை             தந்தார் பலியாய் குருசினில்             ஈந்தார் சுத்த ஆவிதனை             சிந்தித்துப் பணிந்திடுவோம் - நிதமும்   3.          அந்த காரத்தில் ஆழ்ந்திருந்தோம் - தம்                     விந்தையான ஒளி காட்டினார்             சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தாரே             சந்ததம் பணிந்திடுவோம் - நிதமும்   4.          வாழ்வினிலே பல வீழ்ச்சியுற்றோம் -நாம்             ஆழ்ந்திடாமல் கை தூக்கினார்             சூழ்ந்திடும் சோதனை யாவும் ஜெயித்திட             தாழ்ந்துமே பணிந்திடுவோம் - நிதமும் ...