உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா
உம்மை
நம்பி சந்தோஷித்தேன்
ஐயா
உம்மை
நம்பி கெம்பீரித்தேன்
ஐயா
உம்மை
நம்பி சந்தோஷித்தேன்
ஐயா
என்னைக்
காப்பாற்றும்
என் தெய்வமே - 2
1. கர்த்தாவே
உம்மை நம்பினேன்
ஒருபோதும்
வெட்கம் அடையாமல்
உமது நீதியின்
நிமித்தம்
என்னை விடுவித்தருளும்
ஐயா - 2 - உம்மை
2. சிங்கக்குட்டி
பட்டினியாய் இருந்து
தாழ்ச்சி
அடைந்து போனாலும்
கூட
கர்த்தரை
தேடுவோர்க்கென்றும்
ஒன்றுமே
குறைவதில்லை
- 2 - உம்மை
3. கர்த்தர்
எந்தன் மேய்ப்பராய்
இருக்கிறார்
நான் தாழ்ந்து
போகவே மாட்டேன்
புல்லுள்ள
இடங்களில் மேய்த்து
அமர்ந்த
தண்ணீரண்டை
நடத்தும் - 2 - உம்மை
4. கருணை தெய்வத்தை
நம்பினேன்
காருண்ய
கர்த்தரை நம்பினேன்
காட்டுப்
புஷ்பங்களை
உடுத்தும் என்
தெய்வமே
எனக்கு
இரக்கம் செய்யும்
ஐயா - 2 - உம்மை
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment