27 April 2021

லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

லேசான காரியம் எதுவும் லேசான காரியம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

 

          லேசான காரியம் எதுவும் லேசான காரியம்

 

                        பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்

                        பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்

                        யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது

                        லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

 

சரணங்கள்

 

1.         மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் -2

            மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது லேசான காரியம -2

 

2.         கூழாங் கல்லாலே கோலியாத் வீழ்ந்தது லேசான காரியம் -2

            ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் பெறுவது லேசான காரியம் -2

 

3.         கற்பாறை போலே கடல் மேல் நடப்பது லேசான காரியம் -2

            கற்சாடி நீரையும் கனிரசமாக்குதல் லேசான காரியம் -2

 

4.         குருடரின் கண்களை வார்த்தையால் திறப்பது லேசான காரியம் -2

            மரித்த மனிதரை உயர்த்திட செய்வதும் லேசான காரியம் -2

            - என் இயேசுவுக்கு லேசான காரியம்

 

5.         உயிரற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் -2

            தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் -2

            உமக்கது, லேசான காரியம் - பெலன் உள்ளவன்

 

6.         இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் -2

            இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் -2

            உமக்கது, லேசான காரியம் - பெலன் உள்ளவன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...