அதிகாலையிலே ஆதவன் எழுமுன்

அதிகாலையிலே ஆதவன் எழுமுன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   அதிகாலையிலே ஆதவன் எழுமுன்

                        ஈசனே உம்மிடம் வந்துள்ளேன்

                        இந்த நாள் முழுதும் என்னை வழி நடத்த

                        உந்தன் அருளினாலே என்னை நிறப்பிடுமே

 

1.         பரிசுத்த தந்தையே உம் நாமம்

            பாடிப் புகழ்கிறேன் இந்நேரம்

            உமது ஆட்சி வரவேணும்

            உமது திட்டங்கள் நிறைவேறனும்

 

2.         விண்ணக தந்தையே உம் நாமம்

            பாடிப் புகழ்கிறேன் இந்நேரம்

            அனுதின உணவை எனக்குத் தாரும்

            என் அடிவீழாமல் காத்தருளும்

 

3.         தூய தந்தையே உம் நாமம்

            பாடிப் புகழ்கிறேன் இந்நேரம்

            சோதனையில் வீழாமல் காத்தருளும்

            தீங்கிடமிருந்து மீட்டருளும்

 

4.         உலகத்தின் இரட்சகா உம் நாமம்

            பாடிப் புகழ்கிறேன் இந்நேரம்

            மன்னிக்கும் மனதை தந்தருளும்

            குற்றங்கள் அனைத்தையும் பொருத்தருளும்

 

5.         நித்திய தந்தையே உம் நாமம்

            பாடிப் புகழ்கிறேன் இந்நேரம்

            ஆட்சியும் மாட்சியும் வல்லமையும்

            என்றென்றும் உமக்கே ஆமென் ஆமென்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

  1. நான் நீண்ட நாட்கள் தேடினேன், இந்த பாடல் வரிகள் கிடைக்கவேண்டுமென்று, நன்றி உங்களுடைய தொகுப்பிற்கு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி!
      தேவனுக்கே மகிமை!

      உங்களது பதிலின் மூலம்
      இந்த தளத்தின் பயனுள்ளதாக உணர்கிறேன்.
      நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே