27 April 2021

அஞ்சாதே யேசு ரட்சகர்

ஞா.கீ:250

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

250. இராகம்: கரஹரப்பிரியை                                             ரூபகதாளம்

 

                             பல்லவி

 

            அஞ்சாதே யேசு ரட்சகர்

          ஆத்மத் துயர் நீக்க வல்லவர்.

 

                             அனுபல்லவி

 

           வஞ்சமே மிஞ்சுமா? பஞ்ச பாதகன் நானென்று. - அஞ்

 

                            சரணங்கள்

 

1.        திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்

           திருச்சுதன் பதம் தழுவி நற்கதிக்

           கருள் பெற்றான், என் வேதஞ் சொல்வதை

           ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல். - அஞ்

 

2.        வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்

           வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்,

           துள்ளிப் பூரிக்கும் போதுன் மேலே

           தூதர் சங்கமும் களிப்பதாலே. - அஞ்

 

3.        மேய்ப்பன் மந்தையை விலக்கின ஆட்டை

           வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்,

           வாய்ப்புடன் மனம் மகிழும் போலே

           மானுவே லுனைத் தழுவாமலே. - அஞ்

 

4.        தொண்ணூற் றொன்பது நீதிமான்களில்

           துயரடை பாவி யொருவன் மீதினில்

           எண்ணருந் தூதர் மகிழ்வதாலே

           ரட்சிப் புனக்குப் பலித்ததாலே. - அஞ்

 

5.        மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்

           வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்

           தருணம் ஈதெனத் தாசர் கூடி,

           சாற்றும் மொழியை ஏற்று நீவர. - அஞ்

 

 

- லுத்தரன் பாடல்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...