237. இராகம்: ஆனந்தபைரவி ஆதிதாளம்
சரணங்கள்
1. அடியேன் மனது
வாக்கும் கொடிய நடத்தையுமே
ஆவியால் சீர்படுத்தும், ஸ்வாமீ.
2. உமக்கே யான் சொந்தம்; தீயோர் தமக் கந்நியனாய்ப்
போக
உதவும் எளியேனுக்கென ஸ்வாமீ!
3. பூமியில் வசித்தும், நீர் தாமே எனது வாஞ்சை;
புகலிடம் அளியும், என் ஸ்வாமீ.
4. சஞ்சல மேதெனக்கு? பஞ்சம் படைகளேது?
தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ.
5. விண்ணி லோரிடமும், யான் மண்ணுலகை வெறுக்க
மெய்த் தவமும் தாரும். என் ஸ்வாமீ.
- தேவவரம் முன்ஷி
No comments:
Post a Comment