104. இராகம்: உசேனி ஆதிதாளம்
(409)
பல்லவி
அதிசயமான
புண்ணியம்!-நம்மை படைத்த
ஆண்டவர்
பாடுபட்டு, மீண்டிரட்சித்த செயல்
அதிசயமான புண்ணியம்!
அனுபல்லவி
சதி வினை அலகை சொல்லியபடி, விலக்கிய
தருமிசை கனி நுகர் அதம் ஏவை பவம் அற,
மதி மிகு தேவ குமாரன் இப்பூமியில்
வந்ததும் ஜீவனைத் தந்தெமைப் புரந்ததும்
- அதி
சரணங்கள்
1. பாங்காகச் சீடர் தமது-பதம் விளக்கி
பரிசுத்த நற்கருணை பக்ஷமாக அருளி,
பல பல புத்தி சொன்னதும், பரிந்திரவில்
பூங்காவனத்தில் சென்றதும்,-பொறுமையாக
புண்ணியன் ஆத்துமத்தில் புகலரும் கஸ்திவாதை
பூண்டு திகிலடைந்ததும், புவி அனைத்தும்
தாங்கினன் அழுது கொண் டேங்கி, ப்ரலாபித்து,
தரையில் மும்முறை முகம்பட விழுந்ததும்,
அவர்
ஓங்கிய ஜெபங்களும் தபங்களும் அவஸ்தையில்
உதிரப்ரவாக வேர்வைகள் பெருக்கானதும் -
அதி
2. தேவன் இக்கோலமாகவே-செருக்களத்தில்
சென்று கொல்கதா என்னும் குன்றிற் கெழுந்ததின்
பின்
திருடர் இருவர் நடுவே, சிலுவைதனில்
பாவிகள் தான் அறைந்ததும், பரிகாசங்கள்
பண்ணவும் நிருவாணமாய் அண்ணல் தொங்கினதுவும்
பாய்ந்த குருதி வெள்ளமும், பயங்கரமாய்
ஆவி விட்டிறந்ததும், ஜீவனைக் கொடுத்ததும்
அயல் விலாத் திறந்ததும்-அடக்கப்பட்டதும்,
அப்பால்
மேவி அங்குயிர்த்ததும், எழுந்ததும் நடுவிட
மீள்வதும், ஏசுநா யகர் அருள் செய்வதும்
- அதி
- வே.சா
No comments:
Post a Comment