27 April 2021

அதிசயம் நிகழ்த்தும் இயேசு தேவன்

நிஜீ.கீதங்கள்:1822

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                   அதிசயம் நிகழ்த்தும் இயேசு தேவன்

                        அன்பின் பாதையிலே

                        அருள் வந்து சேரும் ஆனந்தம் பெருகும்

                        அவரின் அன்பினிலே

                        இயேசு ராஜாவே என் வாழ்வின் ஜோதியே

                        கிருபை பொழிந்திடுமே

                        எங்கள் நித்திய தேவனே

 

1.         அகிலம் முழுவதும் அன்பே பொழியும்

            அருளின் மேகமே

            அன்பின் தீபமே

            அல்லேலூயா பாடி

            உம்மை நானும் போற்றுவேன்

            அடைக்கலம் நீரே ஆனந்த கீதம்

            என்றும் பாடுவேன்

            என் இதய கானமே ஏழிசையின் ராகமே

            என்றும் நீரே எந்தன் மீட்பர்

            எனக்கினி கவலையில்லை

 

2.         தாகம் கொண்ட மான் போல் நானும்

            தவித்து அலைந்தேனே

            தஞ்சம் என்று நெஞ்சம் தந்தேன்

            நெகிழ்ந்து போனேனே

            உந்தன் கிருபை ஒன்றே போதும்

            உள்ளம் ஏங்குதே

            எந்தன் ஆத்மா உம்மை சேரும்

            வரமும் வேண்டுமே

            நிலை மாறிடும் உலகிலே நேச கரம் நீட்டியே

            என்னை அழைத்தீர் கண்ணீர் துடைத்தீர்

            உம்மை நான் மறவேன்

            பாரம் போக்கியே என்னில் ஜீவன் தாருமே

            பாவி எந்தன் வாழ்வை மாற்றுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...