432. இராகம்: மோகனம் ரூபக
தாளம்
பல்லவி
அகலா தென்னோடு
வாழும்
அருமைக்
கிறிஸ்தரசே
அனுபல்லவி
மிகப் பாவியாகு மென்னில்
மிக தயை நிறைந்தோனே! - அகலா
சரணங்கள்
1. என் திரு ரத்தத்தாலென்
உள்ளத்தை சுத்தமாக்கி
எந்த னகத்தில் வாழும்
என்னருமை நாதனே - அகலா
2. சுத்த இதயம் என்னில்
துரிதமா யுண்டு பண்ணி
நித்தம் நிலைக்கும் ஆவி
நீசனெனக் கருளி - அகலா
- ஜோசப் ஜோயல்சிங்
No comments:
Post a Comment