அதிசயமானவர்
இயேசு - இவர்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடா தேவன்
அதிசயமானவர் இயேசு
1. அகிலம் அனைத்தையும் படைத்தவரே
உம்மை பாடாதிருப்பேனோ
உந்தன் நாமம் என்றும் அதிசயமே
அல்லேலூயா துதி உமக்கே - என்றும்
2. எரிகோ மதிலை தகர்த்தவரே
உம்மை போற்றாதிருப்பேனோ
எக்காள தொனியும் முழங்கிடவே
கர்த்தாவே ஜெயம் தந்தீரே - என்றும்
3. கானவூர் கல்யாண விருந்தினிலே
அன்று அதிசயம் செய்தவரே
தண்ணீரும் திராட்சை ரசமானதே
உந்தன் அற்புத மகிமையாலே - என்றும்
4. ஆகாரின் கண்ணீரை கண்டதினால்
ஓர் ஊற்றை திறந்தவரே
அன்னாளின் ஜெபத்திற்கு பதிலளித்து
சாமுவேலை தந்தவரே - என்றும்
5. துதியில் வாசம் செய்பவரே
உம்மை துதித்திடுவேன் என்றும்
தூயாதி தூயவர் உந்தனையே
தூதர் சேனை தொழுதிடுதே - என்றும்
No comments:
Post a Comment