29 April 2021

அதினதின் காரியங்கள் அதினதின் காலத்திலே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அதினதின் காரியங்கள் அதினதின் காலத்திலே

            நேர்த்தியாக செய்திடுவாரே நிச்சயமாய் செய்திடுவாரே (2)

           

                        சோர்ந்து போகாதே எந்தன் மகனே

                        சோர்ந்து போகாதே எந்தன் மகளே - அதினதின்

 

1.         அழ ஒரு காலமுண்டென்றால்

            நகைக்கவும் நாட்கள் வந்திடுமே (2)

            புலம்பல் யாவும் நீக்கியே

            நடனம் ஆடச்செய்வாரே (2) - சோர்ந்து போகாதே

 

2.         நிந்தையின் நாட்களுண்டென்றால்

            நேசிக்கும் காலம் வந்திடுமே (2)

            வெட்கங்கள் யாவும் மாறுமே

            மகிழ்ந்து துதிக்கச் செய்வாரே (2) - சோர்ந்து போகாதே

 

3.         இழக்க காலமுண்டென்றால்

            சேர்க்கும் வேளை வந்திடுமே (2)

            தோல்விகள் யாவும் நீக்கியே

            களிகூர்ந்து மகிழச்செய்வாரே (2) - சோர்ந்து போகாதே

 

 

- Pastor. David

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...