364.
இராகம்: இந்துஸ்தான் ககுபா ஆதி
தாளம் (492)
பல்லவி
அடங்காத நாவு; தீதே அதை
ஆட்கொள்ளவே
பார் இப்போதே; சற்றும்
சரணங்கள்
1. உடலதில்
அது சிறு அவயம் ஆயினும்
சட
சடெனவே எழுந்தாடும்;-தீராச்
சல்லியம்[1] மூட்டிச்
சண்டை போடும், சற்றும் - அடங்
2. மூர்க்க
அசுவமது[2] சூட்ச
கலினமதால்[3]
ஈர்க்கம்[4] மடங்கி
அடங்கிடுமே;-அதை
இயற்றும்
வழியில் உடன்படுமே, சற்றும் - அடங்
3. தேட
அரிய கப்பல் சிறிய சுக்கான் ஒன்றால்
ஓட
விடப்படுமே நேராய்-நாவோ
உற்றிணங்காது
நற் சீராய், சற்றும் - அடங்
4. மூட்டும்
அற்ப நெருப்பு தோற்றி எத்தனை பெரும்
காட்டைக்
கொளுத்தும் அறிவாயே;-அந்நேர்
கண்டறி
குறுநாவும் தீயே, சற்றும் - அடங்
- ஜாண் பால்மர்
No comments:
Post a Comment