456.
இராகம்: வசந்தபைரவி திரிபுடதாளம்
பல்லவி
அந்த நாள் பாக்கிய நாள்-நான் மீட்கப்பட்ட
அந்த
நாள் பாக்கிய நாள்.
அனுபல்லவி
அந்த
நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது
அசுத்தங்கள் நீக்கின நாள் - அந்த
சரணங்கள்
1. அன்றே
எனக்குப் பேதித்தார்,-அவர் வழியில்
அனுதினம்
செல்லக் கற்பித்தார்;
என்றும்
அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார்
என் இரட்சகர், எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே. - அந்த
2. அந்நாளில்
வாக்குப் பண்ணினேன், உறுதியாக
எந்நாளும்
நான் புதுப்பிப்பேன்;
சொன்ன
இவ்வாக்கை நிதம், சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத
பலம் தாராய்; என்னையாட்கொண்ட தேவா. - அந்த
- அருள்திரு. வே. சந்தியாகு
No comments:
Post a Comment