27 April 2021

அதி மங்கல காரணனே

ஞா.கீ:39

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

39. இராகம்: சுகுபா                                                  ஆதிதாளம்

 

                             பல்லவி

          அதி-மங்கல காரணனே

            துதி-தங்கிய பூரணனே-நரர்

            வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த

            வண்மையே[1] தாரணனே[2]! - அதி

 

                             சரணங்கள்

1.         மதி-மங்கின எங்களுக்கும்

            திதி[3] - சிங்கினர்[4] தங்களுக்கும் - உனின்

            மாட்சியும்,[5] திவ்விய காட்சியும் தோன்றிட

            வையாய் துங்கவனே! - அதி

 

2.         முடி-மன்னர்கள் மேடையையும்,

             மிகு-உன்னத வீடதையும்-எண்ணா

             மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,

             வந்தனையோ தரையில்? - அதி

 

3.         தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,

             உம்பர்[6]-வாய்திரள் பாடுதற்கும்,-உனைப்

             பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்

             பெற்ற நல் கோலம் இதோ?       - அதி

 

- தேவவரம் முன்ஷி

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] அழகு

[2] நிலையானவர்

[3] மகிமை

[4] நிலைகுலைந்தோர்

[5] மகிமை

[6] தூதர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...