27 April 2021

அதிசயமாய் நம்மை நடத்திடுவார்

நிஜீ.கீதங்கள்:1972

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அதிசயமாய் நம்மை நடத்திடுவார்

          ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்

 

                        தேசமே பயப்படாதே

                        தேவன் பெரிய காரியம் செய்வார்

 

1.         இதயத்தை ஊற்றிடுவோம்

            கர்த்தரின் சமூகத்திலே

            மனமிரங்கும் நேசர்

            பின்மாரி பொழிந்திடுவார்

 

2.         கண்ணீரால் கழுவிடுவோம்

            இயேசுவின் பாதத்தையே

            நிந்தைகள் நீக்கிடுவார்

            இழந்ததை தந்திடுவார்

 

3.         சத்திய பாதையில்

            நித்தமும் நடத்திடுவோம்

            வெட்கப்பட்டுப் போகாமலே

            வெற்றி மேல் வெற்றி பெறுவோம்

 

4.         வனாந்திரம் செழிப்பாகும்

            வாதைகள் மறைந்து விடும்

            சந்தோஷம் என்றும் பொங்கும்

            சம்பூரணம் அடைவோம்

 

5.         சீயோனின் மாந்தர்களே

            கெம்பீரமாய் பாடுங்கள்

            சேனைகளின் கர்த்தர்

            என்றென்றும் நம்முடனே

 

 

Pastor. R. Reegan Gomez

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...