29 April 2021

அதோ மாட்டுத் தொழு பார்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

1.       அதோ! மாட்டுத் தொழு பார்!

            மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?

 

            பல்லவி

 

                        இவர் தான் மா வல்ல கர்த்தர்

                        இவர் மகிமையின் ராஜா

                        திருப்பாதம் பணிவோம்

                        ராஜ கிரீடம் சூட்டுவோம்

 

2.         கஷ்டமாய் வனத்தில் யார்

            உபவாசம் செய்கிறார்? - இவர்

 

3.         அன்பின் வார்த்தை சொல்வதார்

            ஜனம் துதிசெய்வோர் யார்? - இவர்

 

4.         துக்க பாரம் நோய் உள்ளார்

            குணமாக்குகிறதார்? - இவர்

 

5.         லாசரின் கல்லறை பார்

            அங்கு கண்ணீர் விட்டோர் யார்? - இவர்

 

6.         திரள் ஜனக்கூட்டத்தார்

            போற்றி வாழ்த்தும் இவர் யார்? - இவர்

 

7.         இரத்த வேர்வை சிந்தி யார்

            ஜெபத்தில் போராடினார்? - இவர்

 

8.         சிலுவையின் காட்சி பார்

            அரும் ஜீவன் விட்டதார்? - இவர்

 

9.         சாவை வென்றெழுந்ததார்

            அதால் நம்மை மீட்டோர் யார்? - இவர்

 

10.       ராஜ கோலம் அணிந்தார்

            லோகம் யாவும் ஆள்கிறார் - இவர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...