மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
பல்லவி
மலைமா
நதியோ மிகு ஆழ் கடலோ
மருள்
சூழும் கானக வனமோ - எங்கும்
மீட்பர்
சிலுவை சுமப்பேனே
1. பள்ளம்
மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு
நீங்கியே
உள்ளார்வமுடன்
விண் பார்வையுடன்
- நான்
மெள்ள
மெள்ள நடந்தே எனின்
மீட்பர்
சிலுவை சுமப்பேனே
2. இன்னல்
துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும்
வேளையில்
துன்பம்
களைந்தே துயரம்
ஒழிந்தே - நான்
தூயன்
பாதையில் ஊர்ந்தே
அவர்
தூயச் சிலுவை
சுமப்பேனே
3. பூலோக
மேன்மை நாடிடேன்
புவிமேவும்
செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை
சிறியேன்
மேன்மை - என்
ஜீவன்
வழி மறை இயேசுவே
- அவர்
ஜீவ
சிலுவை சுமப்பேனே
- Rev. Dhayanandhan Francis
Comments
Post a Comment