கலங்காதே கலங்காதே

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கலங்காதே கலங்காதே

                        கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் - கலங்காதே

 

1.         முள்முடி உனக்காக

            இரத்தமெல்லாம் உனக்காக

            பாவங்களை அறிக்கையிடு

            (நீ) பரிசுத்தமாகிவிடு (2) - கலங்காதே

 

2.         கல்வாரி மலைமேலே

            காயப்பட்ட இயேசுவைப்பார்

            கரம் விரித்து அழைக்கின்றார்

            கண்ணீரோடு ஓடி வா (2) - கலங்காதே

 

3.         காலமெல்லாம் உடனிருந்து

            கரம்பிடித்து நடத்திச் செல்வார்

            கண்ணீரெல்லாம் துடைப்பார்

            கண்மணிபோல் காத்திடுவார் - உன்னை (2) - கலங்காதே

 

4.         உலகத்தின் வெளிச்சம் நீ

            எழுந்து ஒளி வீசு

            மலைமேல் உள்ள பட்டணம்

            நீ மறைவாக இருக்காதே - கலங்காதே

 

5.         உலகம் உன்னை வெறுத்திடலாம்

            உற்றார் உன்னை துரத்திடலாம்

            உன்னை அழைத்தவரோ

            உள்ளங் கையில் ஏந்திடுவார் - கலங்காதே

 

6.         உன் நோய்கள் சுமந்து கொண்டார்

            உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்

            நீ சுமக்கத் தேவையில்லை

            விசுவாசி அது போதும் - கலங்காதே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே