09 July 2018

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

(இறைவேண்டல் - பரமண்டல ஜெபம்)

 

1.       வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்

            வாழ்க உம் திருநாமம்

            வருக உம் அரசு பெருக உம் விருப்பம்

            வாழ்க உம் திருநாமம்

 

2.         வானகம் போல வையகம் தனிலும்

            வாழ்க உம் திருநாமம்

            தினமெங்கள் உணவை தயவுடன் தாரும்

            வாழ்க உம் திருநாமம்

 

3.         பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும்

            வாழ்க உம் திருநாமம்

            பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல

            வாழ்க உம் திருநாமம்

 

4.         சோதனை நின்றெமை விலக்கியே காரும்

            வாழ்க உம் திருநாமம்

            தீவினையிருந்தே மீட்டிட வாரும்

            வாழ்க உம் திருநாமம்

 

5.         ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும்

            வாழ்க உம் திருநாமம்

            இன்றுபோல் என்றும் இறைவனே உமதே

            வாழ்க உம் திருநாமம்

 

6.         ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்

            வாழ்க உம் திருநாமம்

            ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்

            வாழ்க உம் திருநாமம்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...