ஸ்ரீ மா தேவா


                   ஸ்ரீ மா தேவா
                        திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா

சரணங்கள்

1.         அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து
            சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து
            சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து
            தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே

2.         வானமும் பூமி வாழவந்த மனுவேலனே
            தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே
            ஞான மணவாளனான நாதர் நீ வர
            கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன்

3.         முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே
            சிந்தை களிகூரகுறை தீர்க்க முன்னின்றே
            சிந்து ரசமாக்கி மகிழ சேரவும் வந்தாய்
            அந்தவிதம் இங்கும்வர அழைத்து கும்பிட்டேன்

4.         தேவா இங்கு வந்தால் எந்தன் சிந்தை களிக்கும்
            ஜீவ முடியாடை முகம் ஜோதி ஜொலிக்கும்
            பாவத் துயர் கண்டு என்றும் பயந்து ஒளிக்கும்
            ஆவலாக வந்தால் எந்தன் அறிமுகம் செழிக்கும்

5.         எண்ணும் நன்மை யாவுந்தர என்னோடே இரும்
            இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும்
            முன்னம் சென்று தங்குமிடம் தந்து கொண்டிரும்
            இந்த வேளைக் காருமில்லையென்று கும்பிட்டேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு