நேச ராஜாவாம் பொன்னேசு நாதா
1. நேச ராஜாவாம்
பொன்னேசு நாதா
வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க
ஆசையோடெழுந்து அன்பின் நாதா
தேசு நல்குவீர் சுகம் நூங்க.
பல்லவி
நித்யானந்த
செல்வம் நிறைவாரி
சத்ய
சுருதியின் மொழிபோல் - உம்
சித்தமாகிப்
பெய்யும் அருள் மாரி
நித்தம்
எமின் கண்மணிகள் மேல்
2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா
பிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட -
நல்
ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து
கிருபை ஊக்கமோடென்றும் தேட - நித்யா
3. தேவ சேவைக்கான மேல் வரங்கள்
சேயர் மீதேராளமாகத் தங்க
ஜீவ காருண்யரின் பொற்குணங்கள்
செல்வர் ஜீவியத்தில் விளங்க - நித்யா
4. ஆசி தாரும் அன்பரிரு பேர்க்கும்
அருள் ப்ரபை இவர் மேலே வீசும்
நேசர்க்கும் முகப்பிரசன்னம் நல்கும்
நீர் மெய்ச் சமாதானம் ஈயுமேன் - நித்யா
Comments
Post a Comment