உண்மையாம் உபாசம் எது?


                   உண்மையாம் உபாசம் எது?
                        உண்ணாமல் இருப்பதா அது?

1.         உள்ளத்தில் அன்பினையேப் பேணாமல்
            உடல் தன்னை ஒடுக்கினால் போதுமா
            சடங்கா நோன்பினை மேற்கொண்டால்
            சிந்தையில் மாற்றமே ஆகுமா?

2.         உடையின்றி தவித்திடும் ஒருவனுக்கு
            உடையீந்தால் அதுவன்றோ உபவாசம்
            தடையின்றி பிறருக்குத் தயைகாட்டி
            சடைப்பின்றி உழைப்பதே உபவாசம்

3.         துன்பத்தில் இருப்போரின் துயர் நீக்கி
            தனிமையில் வாடினால் துணையாகி
            எளியோரின் தோழனாய் இணைந்தென்றும்
            இருப்பதே உள்ளத்தின் உபவாசம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே