என் செய்வேன் மகனே நான்
பல்லவி
என்
செய்வேன் மகனே நான்
இதற்கோ உன்னைப் பெற்றெடுத்தேன்
இறையோ பவச் சோதனையோ
இப்படி முடிந்திட
சரணங்கள்
1. ஐயையோ பாலகனே, அதிசயமாய் வந்துதித்தாய்
அருமையாய் வளர்ந்திங்கு, அவதிக்குள் அமைந்தனையே
அருமை திருமைந்தனே வயிறு எரிகுதையோ
2. கன்னத்தில் அடிபடவும் கனத்த சிலுவை தூக்கவும்
கள்ளரோ டடிபடவும் காலமோ என் மகனே
கருத்தாய் உரித்தாய் கரத்தால் எடுத்தேனே
3. இப்போ நான் வாடி நிற்க இக்கட்டு வந்ததையோ
அப்பா நின் திருமேனி ஆணிகளால் தொங்குதையோ
அன்பே முன்பே ஆதரவில்லை ஐயா
4. பாவிகளைத் தேற்ற, பாவக்கறை யகற்ற
படுகிற பாடுகளை நான் பார்ப்பேனோ என் மகனே
பலமாய் உறமாய் அடிகள் விழுகுதையோ
5. நேசன் யோவானையுமே நியமித்தாய் என் மகனே
நின்னையும் நான் நினைத்தால் நெஞ்சமோ ஆறுதில்லை
நினைவே கனவே நிலையில்லா தழிவேனே
6. சாவுரு வேளைகளில் யாம், சான்றோர்களை நினைத்து
சற்குரு நின் போதனையைச் சரிவரச் சாற்றிவைத்தாய்
கர்த்தா கர்த்தா காரும் காருமெனை
Comments
Post a Comment