மனிதனை மனிதனாய் நடத்திடுவோம்


                   மனிதனை மனிதனாய் நடத்திடுவோம் - இறைவனின்
                        மைந்தராய் எவரையும் நோக்கிடுவோம்

சரணங்கள்

1.         இறைவனின் மைந்தராம் இயேசுபிரான்
            தரைமீது சிலுவையில் தம்முயிரால்
            திரைபோல் மக்களை பிரித்து நின்ற கறையாம்
            பிரிவினை ஒழித்தாரே

2.         சமயத்தின் பெயரிலே சகலரையும்
            சமமாகக் கண்டிட மறுத்தனரே
            சமாரியப் பெண்ணையும் ரோமனையும்
            சமமாகக் கண்டவர் இயேசுபிரான்

3.         கிறிஸ்தவன் புறத்தவன் என்றதுமே
            பறந்திடும் பந்தம் பாசமுமே
            இந்நிலை மாறியே யாரையும்
            சொந்த சகோதரர் ஆக்கிடுவோம்

4.         வெள்ளையன் கறுத்தவன் வேற்றுமையும்
            உள்ளவன் இல்லாதவன் என்றும் பல
            உள்ள நம் பேதங்கள் ஒழித்திடுவோம்
            உள்ளத்தில் அன்பினைப் பூண்டிடுவோம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே