இயேசு ராஜா பிறந்திட்டாரு
இயேசு ராஜா பிறந்திட்டாரு
மனசெல்லாம்
நிரஞ்சிட்டாரு
நம்ம இயேசு
ராஜா பிறந்திட்டாரு
வழிகளெல்லாம்
திறந்திட்டாரு - 2
நன்மைகள் செய்திட சுற்றி திரிந்தார்
நம்மை விடுவிக்க பற்றி அலைந்தார்
- 2 - நம்ம இயேசு
1. பாவம் போக்கும் பலியாக
பரலோகத்தில் வழியாக -2
நம்மை வாழ வைக்கும் தேவனாக
நம்மை வழி நடத்தும் ராஜாவாக - 2 - நம்ம இயேசு ராஜா
2. யாக்கோப்பில் ஒரு
நட்சத்திரமாய்
இஸ்ரவேலின்
செங்கோலாய் - 2
நம்மில் பிரகாசிக்கும் வெளிச்சமாக
நம்மை விடுவிக்கும் ராஜாவாக - 2 - நம்ம இயேசு ராஜா
3. தம்மை போல் நம்மை மாற்றிடவே
தன்னைத்தானே தந்தாரே - 2
இம்மானுவேல் தேவனாக
நம்மோடு இருக்கும் ராஜாவாக - 2 - நம்ம இயேசு ராஜா
Comments
Post a Comment