அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் வாசியே
அலைகளைக் கண்டு நீ பயப்படாதே - 2
காற்றினையும், கடலினையும்
அதட்டிடும் இயேசு இப்படகிலுண்டு
- 2 - அக்கரைக்கு
1. விசுவாசமாம் படகில் யாத்திரை செல்கையில்
தண்டு வலித்து நீ கலங்குகையில் - 2
பயப்படாதே இயேசு உடனிருப்பார் - (2)
போகின்ற சொர்க்கிய துறைமுகத்து - (2)
- அக்கரை
2. எனது தேசம் இங்கே அல்லவே
இங்கே நீ பரதேசியாகவல்லவோ - 2
அக்கரையே உனது ஆறுதல் தேசம் - (2)
ஆயத்தமான ஸ்தலம் உனக்கு உண்டு - (2) -
அக்கரை
No comments:
Post a Comment