பிறந்தார் பிறந்தார் இயேசு பெத்தலையில் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் இயேசு பெத்தலையில் பிறந்தார்
பிரதான தூதர் வானில் போற்ற
இத்தரையில் பிறந்தார்
1. கந்தையோ அணிந்தார்
கடும் ஏழ்மையில் பிறந்தார்
நிந்தை இயேசு விந்தையாய்
நம்மை சொந்தமாக்கினார் - 2
ஆ..ஆ..ஆனந்தம்
- 2
2. ஏழையாய் பிறந்தார்
இயேசு தேவையை அளித்தார்
விலையேறப்பெற்ற
அலங்கரிப்பின்
ஆசையை வெறுத்தார் - 2
ஆ..ஆ..ஆனந்தம்
- 2
3. கைகளால் கட்டின
ஆலயத்தில்
கர்த்தர் தங்குவாரோ
இதயம் திறந்து இயேசு பிறக்க
இடமளித்திடுவோம்
- 2
ஆ..ஆ..ஆனந்தம்
- 2
4. ஆரவாரம் கேட்குது
ஆயர் மத்தியிலே
வான சாஸ்திரி
வணங்கி படைக்கும்
காணிக்கை மத்தியிலே - 2
ஆ..ஆ..ஆனந்தம்
- 2
- Mrs. Violet Aaron
YouTube Link
Comments
Post a Comment