அதோ விண்மீன் பாருங்கள்
இதோ என் கதையைக் கேளுங்கள் - 2
உள்ளமே திறந்து உவகையில் மலர்ந்து
ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்
ஹலோ! ஹலோ! கிறிஸ்துமஸ் வாழ்த்து
- (4)
1. ஞானிகள் மூவர் புதிய விண்மீனை வானில் கண்டனர்
ஞாலமே ஆளும் வேந்தனை காண அழைப்பினை யேற்றனர்
- 2
ஒளிகூட்டும் அந்த விண்மீன்
வழிகாட்டி சென்ற கோலம் -
2
அருமை பெருமை என்னவென்று சொல்ல
- அதோ
2. இடைவெளி நேரம் அவசரம் போல இடர்பல சூழ்ந்தன
எருசலேம் நகரும் ஏரோது மன்னனும் தடையாய்
நின்றனர் - 2
தம் வழியில் துணிந்து சென்றனர்
மின் ஒளியில் குடிலும் கண்டார்
- 2
அருமை பெருமை என்னவென்று சொல்ல
- அதோ
3. குடிசைகளெல்லாம் கோபுரமாக்க கடவுள் வரவில்லை
கோபுரமெல்லாம் குடிசைக்குள் போகவே இதுவும்
பொய்யில்லை - 2
விண் மீன்கள் கதையும் இதுவே
மின் மினியின் பாடம் இதுவே
- 2
அருமை பெருமை என்னவென்று சொல்ல
- அதோ
No comments:
Post a Comment