ஈசாயின் அடிமரத்தின் இளந்தளீர் ஒன்று

ஈசாயின் அடிமரத்தின் இளந்தளீர் ஒன்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          ஈசாயின் அடிமரத்தின் இளந்தளீர் ஒன்று

            ஈனலோகத்தை மீட்க பிறந்தது அன்று - 2

                        என்ன என்ன என்ன நமக்கு ஆனந்தம்

                        இன்பம் இன்பம் இன்பம் நமக்கு பேரின்பம் (ஆகா) - 2

 

1.         குயில் கூட்டம் குசியாக பாட்டுப் பாடுதே

            பெரும் மயில் கூட்டம் அக மகிழ்ந்து ஆட்டம் ஆடுதே - 2

            ஐந்து அறிவு ஜீவனுக்கே அந்த சந்தோஷம் - (2)

            இந்த ஆறு அறிவு மனிதனுக்கோ பரம சந்தோஷம் - (2) - என்ன என்ன

 

2.         பூவினங்கள் தென்றலோடு வாசம் வீசுதே

            பசும் புல்லினங்கள் பாலனுக்கு மெத்தையாச்சுதே - 2

            பாவச்சிறையில் வாழும் மாந்தர் பாவம் போக்கினார் - (2)

            அந்தப் பரமன் இயேசு ராஜனுக்கு என்ன கொடுப்போம்

            நம் இதயத்திலே இயேசுவுக்கு இடமும் கொடுப்போம் - என்ன என்ன

 

3.         கன்னி மேரி மடியினிலே மழலை ஆகினார்

            இந்த மண்ணில் வாழும் மனுக்குலத்தின் தலைவன் ஆகினார் - 2

            சாத்தானை ஜெயித்த யூதசிங்கம் ஆகினார் - (2)

            சர்வ உலகை ரட்சிக்கும் தெய்வம் ஆகினார் - (2) - என்ன என்ன

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்