புத்தம் புது வருடமே

புத்தம் புது வருடமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புத்தம் புது வருடமே

            புன்னகை எங்கும் தவழ்கிறதே

            இன்ப இயேசுவே எந்தன் மையமே

            இனிக்குதே வையமே

            இனிக்குதே உள்ளமே

 

                        வாக்குத்தத்தம் தந்தீர் வாழ்வில் கூட வந்தீர்

                        வாழ்வில் இனி வசந்தமே அல்லேலூயா பாடு

 

1.         மாறும் இந்த உலகில் மாறா இயேசு நீரே

            மாறாத நன்மைகள் செய்வீரே

            தேடும் தேவன் நல்ல மேய்ப்பர்

            தந்தார் புதிய ஆண்டை - 2

 

                        நன்மை தரும் இயேசுவே நல்ல நண்பர் நீரல்லோ

                        தினமும் மகிழும் உள்ளம் புகழும் - வாக்கு

 

2.         நானும் உம்மை பாடி நன்றி சொல்வேன் நாடி

            நன்மையையும் கிருபையும் தொடருதே

            பாதை காட்டும் பரிவின் தேவன்

            பாதுகாப்பாரே என்றுமே - 2

 

                        நன்மை தரும் இயேசுவே நல்ல நண்பர் நீரல்லோ

                        தினமும் மகிழும் உள்ளம் புகழும் - வாக்கு

 

 

https://www.youtube.com/watch?v=1Y3z2hHfQ_4

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்