தூங்கு தூங்கு பாலனே
தூங்கு தூங்கு பாலனே
கன்னி மரியின் சேயனே
தூயனே தூயனே
தூங்கு பாலனே - நீ - 2
1. வெளியில் பனியும் பெய்திடுதே
மேனியெங்கும் நடுங்குதே - 2
உமக்கும் மிகவும் குளிருதோ
என் உடையை தருகிறேன் - 2 - தூங்கு
2. தேவ தூதரும் பாடிடவே
தேடியோடி வந்தனரே
- 2
என்றும் உம்மை புகழவே
என் குரலை தருகிறேன் - 2 - தூங்கு
3. வான சாஸ்திரிகள்
வந்தாயிற்றே
பரிசு யாவும் தந்தாயிற்றே - 2
உமக்கு என்ன தருவேனோ
என் இதயம் தருகிறேன் - 2 - தூங்கு
- Suresh Frederick
Comments
Post a Comment