13 December 2024

அன்றொரு நாள் பெத்லகேமில்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்றொரு நாள் பெத்லகேமில்

            பிறந்த நம் வேந்தன்

            மேரி மைந்தன் வானவன்

            வரைந்த கிறிஸ்மஸ் நைட் - 2

 

                        யூத மைந்தனை பாடுங்கள்

                        நம் நாதன் கிறிஸ்துவால்

                        வராது வந்த வாஞ்சையன்

                        நாம் வணங்கிட பிறந்தாரே - 2

                        வராது வந்த வாஞ்சையன்

                        நாம் வணங்கிட பிறந்தாரே

 

1.         வந்துதித்தான் விண் பாலகன்

            பிழைத்தோம் நாமெல்லாம்

            கொண்டாட்டத்தின் கோலமாய்

            கொடுத்தான் கிறிஸ்மஸ் நைட்

 

            மாட்டுத் தொழுவம் ஒன்றிலே

            விண்ணாளும் வேந்தனே

                        முன்னணையில் பூவைப் போலவே

                        இம்மண்ணில் மலர்ந்தாரே - 2

 

2.         யூத மைந்தனை பாடுங்கள்

            நம் நாதன் கிறிஸ்துவால்

                        வராது வந்த வாஞ்சையும்

                        நாம் வணங்கிட பிறந்தாரே - 2

            உலக மாந்தர் யாவருக்கும்

            சந்தோஷம் தந்திடும்

            மகிழ்வான செய்தி கூறிடும்

            வசந்தம் கிறிஸ்மஸ் நைட்

 

                        விண்ணின் வேந்தன் பிள்ளையாய்

                        இம்மண்ணின் தாரகையாய்

                                    எல்லோரின் நெஞ்சில் நேசமாய்

                                    நாம் துதித்திட உதித்தாரே - 2

 

3.         இருளில் ஆழ்ந்த பூமியில்

            உதித்த பொன் தெய்வம்

            புதுவாழ்வு நல்கும் ஆற்றலாய்

            எழுந்த கிறிஸ்மஸ் நைட்

                        யூத மைந்தனை பாடுங்கள்

                        நம் நாதன் கிறிஸ்துவால்

                                    வராது வந்த வாஞ்சையன்

                                    நாம் வணங்கிட பிறந்தாரே - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...