வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை
வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை
வாழ்த்தி பாடி துதித்தனரே
தூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை
பணிந்தனரே மகிழ்ந்தனரே - 2
வந்ததே ஒளி வந்ததே
என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே
- 2
1. பூமி எல்லாம் இருள் நீங்கிட
பரலோகத்தின் ஒளி வந்ததே - 2
வானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே
வந்ததே ஒளி வந்ததே - 2 - வந்ததே
2. பூமி எல்லாம் பனி துளிகள்
பாலன் இயேசுவை கொண்டாடுதே - 2
மந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட
வந்ததே ஒளி வந்ததே - 2 - வந்ததே
3. நட்சத்திரங்கள் வழி காட்டிட
வான சாஸ்த்திரிகளும்
வந்தார்கள் - 2
பாலன் இயேசுவை சாஸ்த்திரிகள்
பணிந்திட
வந்ததே ஒளி வந்ததே - 2 - வந்ததே
- P. Rathna Mani
Comments
Post a Comment