பூந்தென்றலே கொஞ்சி பேச வா
பூந்தென்றலே கொஞ்சி பேச வா
தேன் மலர்களே மனம் வீச வா
விண் தேவ சுதன்
என் ராஜனவர் பிறந்தார் -
2
விண்ணொளி வீசும் இரவிலே - 2
விண் தேவ சுதன்
என் ராஜனவர் பிறந்தார் -
2
1. காலை தோன்றும் சூரிய உதயம்
உன்னை தழுவிட வேண்டும்
மாலை வீசும் மார்கழி தென்றல்
உன்னை மயக்கிட வேண்டும்
உனது
அழகில் மயங்கும் இதயம்
உன்னை
அடைந்திட வேண்டும் - 2
விண் ராஜனே என் தேவனே
உனது வரவில் மகிழும் இதயம் - விண்ணொளி
வீசும்
2. வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம்
உன்னை வணங்கிட வேண்டும்
பூமி எங்கும் வலம் வரும் நிலவுமே
உன்னை புகழ்ந்திட வேண்டும்
உனது
உயிரில் கலந்த இதயம்
உன்னை
சேர்ந்திட வேண்டும் - 2
விண் ராஜனே என் தேவனே
உனது வரவில் மகிழும் இதயம் - விண்ணொளி
வீசும்
- Philip Varghese
Comments
Post a Comment