இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்
இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்
எபினேசர் அவர்
நாமம் போற்றிப் பாடுவோம் - 2
போற்றிப் பாடுவோம் புகழ்ந்து
பாடுவோம் - 2
1. செங்கடலும் வந்தது
அதனை பிளந்தார்
யோர்தான் வந்தது பிரித்தார் - 2
எரிகோ வந்தது உடைத்துப் போட்டார்
எதிரி சாத்தானை மிதித்துப் போட்டார் -
2 - இதுவரை
2. குறைவுகள் வந்தபோது நிறைவாய் வந்தார்
தோல்வியின் பாதையில் ஜெயத்தைத் தந்தார்
- 2
சுகவீனம் நேரத்தில் (வந்தபோது) சுகத்தைத்
தந்தார்
தடுமாறும் வேளையில் தாங்கிப் பிடித்தார்
- 2 - இதுவரை
3. மலைகள் விலகிப் போனாலும் என்ன
பர்வதங்கள்
அசைந்து போனாலும் என்ன - 2
இதுவரை நடத்தினார் (நடத்தினவர்) இனியும்
நடத்துவார்
சோர்ந்து போகாமல் ஜெயித்து
முன்னேறுவோம் - 2 - இதுவரை
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment