தேவ பாலா கண்ணுறங்கு

தேவ பாலா கண்ணுறங்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   தேவ பாலா கண்ணுறங்கு

                        இயேசு தேவா துயிலுறங்கு - 2

                        ஏழைக் கோலம் எடுத்தீரே

                        மாந்தர் நாங்கள் பிழைக்கவே - 2

 

1.         வானில் ஜோதி நட்சத்திரம் ஜொலித்தது

            சாஸ்த்ரிகட்க்கு காட்சி தந்து அறிவித்தது - 2

            இயேசு பாலன் பிறந்த இடத்தை

            முன்னே சென்று காண்பித்தது - 2 - தேவ பாலா

 

2.         இராயர் மூவர் தொழுவத்தை அடைந்தாரே

            பொன் வெள்ளி தூபவர்க்கம் படைத்தாரே - 2

            நாமும் இன்று பாலனை போற்றி

            ஆரிராரோ பாடிடுவோம் - 2 - தேவ பாலா

 

3.         வான் புவியை ஆள வந்த பரமனே

            ஏழை என்னை நோக்கிப் பாரும் இயேசுவே - 2

            உம் கிருபை எனக்கு தாரும்

            உம்மில் நானும் பலப்படவே - 2 - தேவ பாலா

 

 

- M. Basvin

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்