மகிழ்ந்து களிகூறுங்கள் மகிழ்ந்து களிகூறுங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள்
- 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்
- 2
1. விண்ணுலகம்
துறந்து மண்ணுலகம் உதித்து - 2
தம்மைத்
தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் - 2 - மகிழ்ந்து
2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே - 2
நித்திய
வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார் - 2 - மகிழ்ந்து
3. வாழ்ந்து
காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே - 2
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம் - 2 - மகிழ்ந்து
- ஜான்சி
Comments
Post a Comment