ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே

ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே

            ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே - 2

            உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்

            உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் - 2

 

                        உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது

                        உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது - 2

 

1.         முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்

            காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார் - 2

            தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்

            உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் - 2 - உங்கள்

 

2.         வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது

            அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது - 2

            சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்

            தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் - 2 - உங்கள்

 

                         பெருமழை ஒன்று பெய்யும்

                         நம் தேசத்தின் மீது பெய்யும் - 2

                         ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்

                         பெருமழை ஒன்று பெய்யும்

                         நம் தேசத்தின் மீது பெய்யும்

 

                         ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்- 2

                        ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்