பனியின் குளிரின் மெத்தையிலே
பனியின் குளிரின்
மெத்தையிலே
தூங்கு பாலகா
ஏழைத்
தாயின் மடியிலே
நீ கண்வளராய்
- 2
1. வண்ண மாளிகை துறந்து நீ
ஏழைப் பாலனாய் தொழுவில் வந்தாய்
பாவிகளை
மீட்க வந்துதித்த
பாலா
நீ கண் வளராய் - 2 - பனியின்
2. இருளில் நடக்கும் மானிடர்
ஒளியைக் கண்டு மகிழ்ந்திட
கண்மதி வானில் ஒளிர்ந்திட
கண்மணி கண்வளராய் - 2 - பனியின்
3. விண்ணின் தூதர் வாழ்த்திட
மண்ணில் மாந்தர் மகிழ்ந்திட
வான ஜோதி
இலங்கிட
பாலா நீ கண்வளராய் - 2 - பனியின்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment