30 April 2021

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு   

Text file Download        அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

                        அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

 

1.         இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்

            எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

2.         இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்

            பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

3.         இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்

            இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

4.         இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்

            அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - (2)

            அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்

 

- எமில் ஜெபசிங்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அந்த நாள் பாக்கிய நாள்

ஞா.கீ:456

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

456. இராகம்: வசந்தபைரவி                                               திரிபுடதாளம்

 

                             பல்லவி

 

                        அந்த நாள் பாக்கிய நாள்-நான் மீட்கப்பட்ட

                        அந்த நாள் பாக்கிய நாள்.

 

                             அனுபல்லவி

 

            அந்த நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரென்னை

            அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் - அந்த

 

                             சரணங்கள்

 

1.         அன்றே எனக்குப் பேதித்தார்,-அவர் வழியில்

            அனுதினம் செல்லக் கற்பித்தார்;

            என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய

            ஏவினார் என் இரட்சகர், எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே. - அந்த

 

2.         அந்நாளில் வாக்குப் பண்ணினேன், உறுதியாக

            எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;

            சொன்ன இவ்வாக்கை நிதம், சுத்தமாய் நிறைவேற்ற

            உன்னத பலம் தாராய்; என்னையாட்கொண்ட தேவா. - அந்த

 

- அருள்திரு. வே. சந்தியாகு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...