08 February 2023

எல்லையற்ற அன்பினாலே என்னை

எல்லையற்ற அன்பினாலே என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          எல்லையற்ற அன்பினாலே

            என்னை அழைத்தார்

            எண்ணிலடங்கா நன்மைகளாலே

            என்னை நிரப்பினார்

 

                        துதிப்பேன் போற்றுவேன்

                        பாடுவேன் கெம்பீரிப்பேன்

                        ஆ...அல்லேலூயா

 

1.         நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி

            நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்

            இதற்கீடாக நான் என்ன செய்வேன் -என்

            ஜீவனை பலியாக படைக்கின்றேன் நான்

 

2.         உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே

            காணேன் உண்மையாய்

            உணர ஓர் இதயம் தாரும்

            திறந்தருளும் என் மனக்கண்களை

            இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை

 

3.         புழுதியினின்றெம்மை தூக்கியே மீட்டீர்

            நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்

            உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது

            என் சுயம் வெறுத்து

            உந்தன் சித்தம் செய்வேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...