08 February 2023

கவிதை பாடுவேன் கானானின் தேசத்தில்

கவிதை பாடுவேன் கானானின் தேசத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   கவிதை பாடுவேன் கானானின் தேசத்தில்

                        காணக் கிடைக்காத தங்கம்

                        இயேசு ராஜன் நாமத்தை கவிதை பாடுவேன்

 

1.         பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்

            பரிசுத்த பரமன் தந்த ஜீவ தேசம் -2

            மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் -2

            மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம்

            பரலோகில் ஆனந்தம்                                                   - கவிதை

 

2.         நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம்

            நகரத்தின் அஸ்திபாரம் இரத்தின கற்களாம்

            சந்திரன் சூரியன் வெளிச்சமாய் இல்லை -2

            இரட்சிப்பின் ஜனங்களோ அதில் நடப்பார்களே

            தேவனே வெளிச்சமாம்                                                  - கவிதை

 

3.         பன்னிரெண்டு முத்துக்கள் பரலோகில் ஜொலிக்கும்

            வச்சிரக்கல், இந்திர நீலம், சந்திரகாந்தம்,

            மரகதம், கோமேதகம், பத்மராகம், சொர்ணரத்தினம்,

            படிகப்பச்சை, புஷ்பராகம் வைடூரியம், பொன்னியும்

            சுகந்தி ஆனந்தம் -2                                                   - கவிதை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...