10 February 2023

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                        புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

                        பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

 

1.         இருள் நிறைந்த உலகத்திலே

            வெளிச்சமாய் வாருமையா

            பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்

            பரமனே வாருமையா

 

                        வரவேண்டும் வல்லவரே

                        வரவேண்டும் நல்லவரே

 

2.         தடைகள் நீக்கும் தயாபரரே

            உடையாய் வாருமையா

            ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி

            உற்சாகம் தாருமையா

 

3.         எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே

            நிரம்பி வழியணுமே

            மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும்

            பண்பாடி மகிழணுமே - இந்த

 

4.         உலகம் எங்கிலும் சுவைத்தரும்

            வெண்ணிற உப்பாய் மாறணுமே

            இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்

            மரமாய் வளரணுமே

 

5.         துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்

            துயவர் வரவேணுமே

            புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்

            புனிதரே வரவேணுமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...