06 February 2023

எந்த நேரமும் எப்போதுமே

எந்த நேரமும் எப்போதுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   எந்த நேரமும் எப்போதுமே

                        இயேசு எனக்கு ஒத்தாசை

                        இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்

                        இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

 

1.         இக்கட்டில் மனிதர் உதவி

            இல்லாமலே அற்றுப் போனாலும்

            எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே

            இயேசு நாமத்தில் கிடைத்திடுமே-2

 

2.         சொல்லொண்ணா பாடுகள் சகிக்க

            சென்ற காலம் பெலன் தந்தாரே

            எந்தன் வாழ்நாளெல்லாம்

            தேவ சித்தமெல்லாம்

            என்னில் முற்றிலும் நிறைவேறுமே-2

 

3.         சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை

            ஒரு போதும் கெட்டுப் போகாதே

            தம்மைத் தேடுவோரை கர்த்தர் கைவிடாரே

            தேவன் நமக்கு அடைக்கலமே-2

 

4.         ஒவ்வொரு ஆண்டு முழுவதும்

            எவ்வளவோ அற்புதம் செய்தார்

            வருங்காலத்திலும் வருகை வரையும்

            வாக்குத்தத்தம் தந்து நடத்துவார்-2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...