07 February 2023

இயேசு தேவனைத் துதித்திடுவோம்

இயேசு தேவனைத் துதித்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                        இயேசு தேவனைத் துதித்திடுவோம்

                        இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்

                        இதயம் பொங்க நன்றியுடனே

                        போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

 

1.         வார்த்தை வடிவாய் வந்தவரை

            வாதை பிணியை தீர்த்தவரை

            கண்ணின் மணிபோல் காத்த தயவை

            கருணை உருவைத் துதித்திடுவோம்   - இயேசு

 

2.         அடிமை ரூபம் எடுத்தவரை

            அகிலம் பணிந்திட செய்தவரை

            உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்

            உன்னதர் அவரைப் போற்றிடுவோம்      - இயேசு

 

3.         இருளை நீக்கும் மாஜோதியாய்

            உலகில் வந்த அருள் வடிவை

            ஜீவ ஒளியாய் திகழும் அவரை

            இன்றும் என்றும் துதித்திடுவோம்          - இயேசு

 

4.         தேவ தன்மையை வெளிப்படுத்த

            தேவ மைந்தனாய் வந்தவரை

            தேவ சுதராய் நாமும் விளங்க

            கிருபை உருவைத் துதித்திடுவோம்    - இயேசு

 

5.         பாவ சாப மரணமதை

            ஜெயித்து வென்று எழுந்தவரை

            மகிமை சூழ திரும்பி வந்திடும்

            வேந்தன் அவரைத் துதித்திடுவோம்     - இயேசு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...